Big Boss தமிழ் 05 இன்று ஆரம்பம்


-பிரஷானி-

விஜய் TV நடாத்தும் BIG BOSS SEASON – 5, இன்று ( 03.10.2021 ) திகதி விமரிசையாக ஆரம்பமாகவுள்ளது. வழமைப்போலவே இந்த SEASON உம் பல நட்புக்களையும் காதல்களையும் மற்றும் விறுவிறுப்புக்களையும் கொண்டதாக அமையபோகின்றது. உலக நாயகனின் கூற்றுப்படி “எதிர்பாராததை எதிர்பாருங்கள் “ இனிவரும் காலங்களில்.

ஜோன் டி போல் என்ற நெதர்லாந்து நாட்டை நாட்டை சேர்ந்தவரால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட BIG BROTHER நிகழ்ச்சியை தழுவி, முதன்முதலில் இந்தியாவில் தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியினூடாக தமிழ் பிக் பொஸ் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ஒரு பிரபலம் வாய்ந்த நிகழ்ச்சியே BIG BOSS ஆகும். இந்நிகழ்ச்சி தொடர்ந்து நான்கு வருடங்களாக வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றது.

இந்நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எந்தளவு ரசிகர்கள் காணப்படுகின்றார்களோ அந்தளவுக்கு இந்த நிகழ்ச்சியை வெறுப்பவர்களும் காணப்படுகின்றனர் , எனினும்கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு என்று தனித்தனியே ரசிகர் பட்டாளங்கள் காணப்படுகின்றது குறிப்பிடதக்கது. நூறு நாட்களை கொண்ட இந்த வெற்றிப்பயணத்திலே பிரபலங்கள் பிரபலியம்மாவதற்கும் அதன் மூலம் அவர்களின் இலட்சிய கனவுகளை அடைந்துகொள்ளுவதற்கும் உந்துசக்தியாக அமைகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version