மோல்ட்டாவிலிருந்து முதல் முறையாக பெரிய சுற்றுலா குழுவொன்று இன்று (27.12) காலை இலங்கை வந்துள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள மோல்ட்டா நாட்டிலிருந்து, இந்த சுற்றுலாப் பயணிகள் குழு தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்துள்ளது.
இலங்கை சுற்றுலா பயணத்திற்கு ஏற்ற லாபகரமான நாடு என ஏற்கனவே மோல்ட்டாவிலிருந்து இலங்கை வந்த குழு ஒன்றின் பரிந்துரையின் பேரிலேயே இவ்வாறு இந்த சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வந்துள்ளது.
50 மோல்ட்டா சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு, நீர்கொழும்பு, சிகிரியா, தம்புள்ளை, கவுடுல்ல தேசிய பூங்கா, கண்டி, நுவரெலியா, ஹோட்டன்தன்ன, யால ஆகிய இடங்களுக்குச் செல்ல தீர்மானித்துள்ளனர்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 இன் மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08:20 மணியளவில் இந்த சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
