சிறு குற்றங்கள் செய்வோருக்கு இனி சிறை இல்லை!

சிறு குற்றங்கள் செய்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, பெற்றோர் அல்லது வேறு பாதுகாவலரின் கீழ் வீட்டு காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டு வர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதால் பாரிய குற்றவாளிகளாக மாறுகின்றமை தெரியவருவதால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை தியத உயன பிரதேசத்தில் நேற்று (27.12) கைதிகளின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீதிமன்ற உத்தரவின் கீழ் வீட்டுக் காவலில் வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்களை சீர்திருத்துவதற்கு எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டம் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் உட்பட சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை முதல் தடவையாக வீட்டுக்காவலில் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிறு குற்றங்கள் செய்வோருக்கு இனி சிறை இல்லை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version