“நான் சிறையில் ஓய்வாக நலமாக இருந்தேன் நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என திலினி ப்ரியாமாலி தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திலினி ப்ரியமாலி கைதுசெய்யப்பட்டு, கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தொடர்பிலான அனைத்து வழக்குகளிலிருந்தும் நேற்று (27.12) விடுதலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
‘இவை பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள். நான் ஏன் இவ்வளவு பிரபலமாக பேசப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சம்பவம் இரண்டரை மாதங்களாக ஊடகங்களில் வெளிவந்தன. நான் செய்தவை, செய்யாதவை எல்லாம் ஊடகங்கள் மூலம் செய்திகளாக வெளியாகின. இது எனக்கு நேர்ந்த மிகப்பெரிய அநியாயம், என்னுடன் பழகியவர்கள் என் மீது கோபமாக இருந்தால், அவர்கள் என்னை பற்றி நாளளது சொல்ல மாட்டார்கள். இதனால் எனது எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். இதிலிருந்து அதிக அனுபவங்களை பெற்றுக்கொண்டேன். ஒரு அறிவாளி சிறைக்குச் சென்றால், இது ஒரு பல்கலைக்கழகமாக மாறும். நீதிமன்றின் தீர்ப்புப்படி எல்லாம் நடக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
