கொரோனா தொடர்பில் மீண்டும் அவதானம்!

உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (30.12) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உலகின் பல நாடுகளில், குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் பல நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாங்கள் அறிவோம். எனவே தற்போது நாமும் இது தொடர்பில் அதிக அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிட்-19 நோய் தோற்று தற்போது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தோன்றவில்லை எனினும், இன்னும் அது முடிவுக்கு வராததால் மீண்டும் தலைதூக்கும் அபாயங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதுவரை பின்பற்றிய சுகாதாரப் பழக்கவழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

கொரோனா தொடர்பில் மீண்டும் அவதானம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version