மனோவை சந்தித்த தொழிற்சங்க கூட்டமைப்பு

பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனை துறைமுக, எண்ணெய் வள, மின்சார துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தூதுக்குழுவினர் சந்தித்தாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று துறைகளிலும், இன்றைய அரசு செய்து வரும் தில்லு முல்லுகள் பற்றி தனக்கு விளக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் கொள்ளை இலாபம் பெறும் நோக்கோடு வெளிநாடுகளுக்கு எமது நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதாகவும், தொடர்ந்தும் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும், இவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க தாங்கள் கட்சி பேதங்களின்றி ஒரு கூட்டமைப்பாக உருவாகியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் தொழிற்சங்க கூட்டமைப்பு தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டை பாதுக்காக்க உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு தொடர்பில் தான் சந்தோஷமடைவதாகவும், இந்த அமைப்புக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக ஊடகவியலார்கள் முன்னிலையில் கூறிய மனோ கணேசன், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயன் கம்பன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண மற்றும் முன்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு, எல்லோரும் இணைந்து நாட்டை காப்பற்ற ஒன்றிணைய முன்வாருங்கள் என மனோ கணேசன் அழைப்பு விடுத்தார்.


பின்னர் நடப்பவற்றை பிறகு பார்ப்போம். தற்போது அனைவரும் இணைந்து நாட்டை காப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மனோவை சந்தித்த தொழிற்சங்க கூட்டமைப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version