பாப்பரசரின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு!

முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். 600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே பாபராசரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 95வது வயதில் கடந்த 31ம் திகதி வத்திக்கானில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்களும் தகங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வத்திகானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது இறுதி சடங்கு எதிர்வரும் 5ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களின் தலைமைப் பொறுப்பான பாப்பரசர் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், தனது இறைப்பணிக்கு உடல்நலக் குறைவு குறுக்கிட்டதால் கடந்த 2013ம் ஆண்டு பாதி விலகினார்.

பாப்பரசர் 16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் இறுதி நாட்களை வத்திகானிலுள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார்.

முன்னாள் பாப்பரசர் கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், முதுமை காரணமாக அவரது உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் கர்தினால் வின்செட் நிகோல்ஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் பிறந்தவரான 16-வது பெனடிக்டின் இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர். தனது 78 வயதில் கடந்த 2005ம் ஆண்டு பாபராசராக பாபராசராக பதவியேற்று இறைபணியாற்றி வந்தார்.

 

பாப்பரசரின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version