பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இனிசியோ லுலா டா சில்வா பதவியேற்றுள்ளார்.
இனிசியோ லுலா டா சில்வா மூன்றாவது முறையாகவும் பிரேசிலின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா பிரேசிலின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ் கட்டிடத்தில் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
மேலும் அதிகளாவினான நடன கலைஞர்கள் பங்குபற்றியதால் இந்த பதவியேற்பு விழா முன்னர் ஒருபோதும் இல்லாத அளவு வெகு விமரிசையாக திருவிழா போன்று காட்சியளித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்து லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். போல்சனாரோ லூலாவின் பதவியேற்பு விழாவை தவிர்த்து வெளியாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
.