புகையிரத சேவைகள் திணைக்களத்தில் 8000க்கும் அதிகமான பணி வெற்றிடங்கள் உள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே நேற்று (02.01) தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவைகள் திணைக்களத்தை விற்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறதா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2 வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
புகையிரத சேவைகள் ஊழியர்களின் பணி வெற்றிடங்கள் காரணமாக தினமும் கிட்டத்தட்ட 80 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த அரசாங்கம் முழு புகையிரத சேவையையும் முடக்கி தனியாருக்கு விற்க மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் முறியடிக்க தமது சங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
