புதிய மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02.01) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிசீலனை எதிர்வரும் வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது, இதில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
