உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமெசோன் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெசோன் நிறுவனம் உலகளவில் சுமார் 1.5 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட இணையதளம் மூலம் வியாபாரத்தை மேற்கொள்ளும் உலகின் முன்னணி நிறுவனமாகும்.
மேலும், இந்நிறுவனம் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை தொடர்பான வினாக்களுக்கு, தன் நிறுவனத்தின் செலவைக் குறைபதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமெசோன் நிறுவனம் பதிலளித்துள்ளது.
எனினும் எந்தெந்த நாடுகளிலுள்ள தங்கள் பணியிடங்களில் அதிக பணிநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியிடபடவில்லை.
