கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!

பங்களாதேஷில் கண்ணாமூச்சி விளையாட்டின்போது தற்செயலாக ஒரு கப்பல் கொள்கலனுக்குள் தன்னை ஒளித்துக்கொண்ட 15 வயது சிறுவன் ஒரு வாரத்தின் பின்னர் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

பங்களாதேஷை சேர்ந்த ஃபாஹிம் எனும் சிறுவன் கடந்த ஜனவரி 11 அன்று துறைமுக நகரமான சிட்டகாங்கில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னை கொள்கலனுக்குள் ஒளித்துக்கொண்டு அதற்குள் தூங்கியுள்ளார் என இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் அந்த கொள்கலன் மலேசியாவிற்கு செல்லும் வணிகக் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது, ஆறு நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 17ம் திகதி அன்று மேற்கு துறைமுகத்தில் கொள்கலனுக்குள் இருந்து சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, கண்ணாமூச்சி விளையாட்டின் போது கொள்கலனுக்குள் ஒளிந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுவன் மனித கடத்தலில் சிக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்த போதிலும் இது விளையாடும்போது நேர்ந்த விபரீதம் என தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதமளவில் சிட்டகாங்கில் இருந்து மலேசியாவின் பினாங்கு துறைமுகத்திற்கு இதேபோன்ற பயணத்தை மேற்கொண்டு, கப்பல் கொள்கலனில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுவனின் சிதைந்த உடலை போலீசார் மீட்டனர் என்று இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!

Social Share

Leave a Reply