வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பணத்திற்காக அப்பாவி மக்களின் உடல் உறுப்புகளை விற்க தூண்டிய தரகர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது சந்தேகநபர் 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (31.01) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.