ஹொரணயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!

நேற்றிரவு (03.02)  ஹொரண, கோனாபொல கும்புகாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLINTEC) விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொனாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இவர் தனது சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் வீதித் தடையில் மோதி கவிழ்ந்து கொங்கிறீட் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மொரகஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹொரணயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply