Big Boss இன் 18 பேரும் இவர்கள்தான்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ள
நிலையில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆரம்பமே அசத்தல் என்பது போல இசை
மூலம் பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC யினால் தெரிந்தெடுக்கப்பட்டும், பெண்கள்
கால் பதிக்க தயங்கும் கானா துறையில் அங்கீகாரம் பெற்ற ஒரே பெண் இசைவாணி முதலில்
பிக்போஸ் வீட்டினுள் அடியெடுத்து வைத்தார்.

இரண்டாவது போட்டியாளராக இயக்குனர் மற்றும் நடிகர் ராஜீ ஜெயமோகன்.

இந்த சீசனிலும் ஒரு இலங்கை தமிழ் பெண் பிக்போஸின் 3 வது போட்டியாளர் ஜெர்மன்
மாடல் மற்றும் ஆடைவடிவமைபாளர் மதுமிதா.

4 வது போட்டியாளராக ஓப்பன் பண்ணா என்ற YouTube சேனலின் மூலம் தமிழ் சினிமா
விமர்சனங்களை கூறி பல பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமான அபிஷேக் ராஜா.

தமிழ் பிக்போஸ் வறலாற்றில் முதல்முறையாக 5 வது போட்டியாளராக மாடல் அழகி
திருநங்கை நமிதா மாரிமுத்து.

பிக்போஸ் வீட்டிற்குள் 6 வது போட்டியாளராக விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் பிரியங்கா
தேஷ்பாண்டே

பிக்போஸ் வீட்டினுள் 7 வது போட்டியாளராக ஜெமினி கனேசனின் பேரன் நடிகர் விவசாயி
டென்னீஸ் விளையாட்டு வீர்ர் என பல முகங்களைக் கொண்ட அபினய் வட்டி.

சின்னதிரை சீரியல் நடிகை மற்றும் மாடலாகவும் இருக்கும் பவானி ரெட்டி 8 வது
போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு பிக்போஸ் சீசனின் 9 வது போட்டியாளர்

மலேசியா போட்டியாளர்களின் வரிசையில் இந்த முறையும் பிரபல டிக்டோக் கலைஞர் நதியா
சங் 10 வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

தான் யார் என்பதை நிருபிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வது போட்டியாளராக
நடிகர் வருண்

பிக்போஸ் நிகழ்ச்சியின் 12 வது போட்டியாளராக பிரபல தொகுப்பாளர், நடிகரான இமான் அன்னாச்சி

கூடைப்பந்தாட்ட வீராங்கனை மற்றும் மாடல் அழகி சுருதி ஜெயதேவனும் இந்திய
அளவிலான மிஸ் சூப்பர் குளோப் மற்றும் உலக அளவிலான மிஸ் சூப்பர் குளோப் அழகி
பட்டத்தை வென்ற அக்ஷரா ரெட்டியும்13. 14 வது போட்டியாளர்களாக இணைந்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழச்சி டாக்டர் ராப் இசை கலைஞர் ஐக்கி பெர்ரி 15 வது போட்டியாளர்.

16 வது போட்டியாளராக நாடக கலைஞர் தாமரை செல்வி

பிக்போஸ் நிகழ்ச்சியில் 17 வது போட்டியாளராக நடிகர் சிபி சந்திரன்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்போஸ் நிகழ்ச்சியின் இறுதி
போட்டியாளராக நடிகர் நிரூப் நந்நகுமார்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version