பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்குள் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான போதைப்பொருள் சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் தடுப்பு,
நடவடிக்கைகளுக்காக பயிற்சியளிக்கும் செயலமர்வுகள் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இணையவழி ஊடான மூன்று நாள் பயிற்சி செயலமர்வாக நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சி செயலமர்வானது தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜீ.விஜயதர்ஷனின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இணையவழி பயிற்சி செயலமர்வில் முதல் நாளான (04) நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தவிசாளர் பிரியன்கி அமரபண்டு ஆகியோர் இணையவழி ஊடாக அதிதிகளாக கலந்துகொண்டு பயிற்சியினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.