அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (09.02) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் நேற்று (08.02) காலை 8.00 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஈடுபட்டிருந்தனர்.

பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவடைந்தாலும் தமது கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க எதிர்பார்ப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version