மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரையில்

மதிசுதாவின் கதை, இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு திரைப்படம் பல தடைகளுக்கு மத்தியில் நாளை(10.02) திரையிடப்படவுள்ளது. ஏற்கனவே திரையிடுவதாக இருந்த போதும் உரிய காரணங்களை வழங்கமால் திரையரங்குகளுக்கு இந்த திரைப்படத்தை திரையிட வேண்டாமென்ற அறிவுப்பு பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதிசுதாவின் கடுமையான போராட்டத்தின் மூலம் கடந்த வாரம் விசேட காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது திரைப்படத்தை மக்கள் பார்வைக்காக வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை(10.02) யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் மாலை 5 மணிக்கும், பருத்தித்துறை SS திரையரங்கில் மாலை 6 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 2 மணி மற்றும் 3.30 இற்கும் பருத்தித்துறை SS திரையரங்கில் 12 ஆம் திகதி 2 மணி மற்றும் 3.30 இற்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

ஏற்கனவே சிறப்பு காட்சியினை பார்வையிட்டவர்கள் இந்த திரைப்படம் தொடர்பில் மிகவும் சிறந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

“இறுதிப் போரின் வாழ்வியல்” என்ற மகுட வாசகத்துடன் இந்த திரைப்படம் வெளிவருகிறது.

மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரையில்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version