ஆசியர்கள் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளடக்கப்படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமென அதிபர், ஆசிரியர் சங்கங்கள் கொரோனா காலத்திலும் போராட்டங்களை நடாத்தி வந்தனர். சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் என்ன தொகையில் அதிகரிப்பு வழங்கப்படப்போகிறது என்ற அறிவிப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. அதிபர் ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளின்படி அண்ணளவாக 5,000-11,000 ரூபா வரையிலான அதிகரிப்பு தரங்களின் படி கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை உப குழு அண்ணளவாக 3,750 – 12,000 ரூபா வரையிலான அதிகரிப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் பாதீட்டில் முடிவு செய்யப்படும் தொகையே 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள உயர்வாக வழங்கபப்டும்.