அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சித்ததன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்புகளிடையிலும் தீ மூடியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஏன் இந்த சர்ச்சைக்குரிய 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கின்றார் என தமக்கு வியப்பாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்த சட்டத்தை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி விஜேதுங்கே சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச மற்றும் தாம் உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் அந்த திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏன் அதை கையில் வைத்துக்கொண்டிருக்கிறார் என தமக்கு விளங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் இதற்கு எதிராக இருப்பதால் இது எளிதான காரியம் அல்ல எனவும், 13வது திருத்தம் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
