இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்திந்து தமது வன்னி மாவட்டத்தின் அரசியல் கள நிலவரம் பற்றி கலந்துரையாடியதாக லக்சயன் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட உழவர்களின் பெரும் குறையாக இருக்கும் நெல் காயவைக்க தனியான நிலப்பரப்பின் தேவை பற்றியும் வன்னி மாவட்டத்தின் நீண்டகாலத் குறையாக இருக்கும் தீயணைப்பு பிரிவின் தேவைப்பாடும் கோரிக்கையாக வைக்கப்பட்டன. அத்தோடு வவுனியா முல்லைத்தீவு மக்களின் சிறுநீரக நோய் அதிகரிப்பும் அதற்கான வைத்தியசாலை உபகரணங்களின் தேவைப்பாடு பற்றியும் சுத்தமான சுகாதாரமான நீர்த் தேவை பற்றியும் உயர்ஸ்தானிகரோடு கலந்துரையாடப்பட்டது.
இன்றைய பேசு பொருளாக இருக்கும் உள்ளூராட்சி தேர்தல் பற்றியும் உயர்ஸ்தானிகர் கேட்டு அறிந்து கொண்டார் என மேலும் லக்சயன் கூறினார்.
