இலங்கையின் சில பகுதிகளில் 3.0 மக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
புத்தள, வெல்லவாய, ஹண்டபனகல ஆகிய பகுதிகளிலேயே இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது பாரதூரமான நிலநடுக்கம் அல்ல என கூறப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் மக்கள் அச்சமடையவோ, பதட்டமடையவோ தேவையில்லை என தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
