தேர்தல்; திரைக்கு பின்னால் சதி – மனோ

“தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது. ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்யுங்கள். வேறு மாற்று வழியில்லை.”

இன்று(145.02) தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை தான் நான் புரிந்துக்கொண்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அந்தளவுக்கு தேர்தல் ஆணைக்குழு வலுவிழந்து போயுள்ளது. அரசாங்கம் பிடிவாதம் பிடிக்கின்றது. இதுதான் இன்று ஜனநாயகத்தின் பரிதாபகரமான நிலையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக தான் சொல்லி வைக்க விரும்புவதாக பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தேர்தல்கள் நடைபெற்று கட்சிகளுக்கு மத்தியிலேயே போட்டிகள் ஏற்பட்டு மக்கள் மத்தியிலேயே பிரச்சார போராட்டங்களை மேற்கொண்டு ஜனநாயக ரீதியில் வெற்றி பெறுவது வழமையாக நடைபெறுவது. உள்ளூராட்சி மன்றம், பாராளுமன்றம், ஜனாதிபதி தேர்தல் எல்லாவற்றிலும் இவ்வாறுதான் இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இலங்கையில் இன்று தேர்தலை நடத்த வேண்டுமென அனைத்து கட்சிகளும் தெருவில் இறங்கி கட்சி பேதங்களின்றி திருப் போராட்டங்கள் நடாத்தவேண்டுமென்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக உணர்வதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் அவர்களுக்கு எதிரான சவால்களை சந்தித்து இந்த நிலைக்கு வைத்துள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்க்காக அவர்கள் போராடுவதாக தெரிகிறது. ஆனால் பலவீனமடைந்து போயுள்ளார்கள். செய்வது அறியாது உள்ளார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் எந்தவித வழக்கிலும் ஆஜராக மாட்டோம் என அறிவித்துள்ளதாக நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் பணமில்லை. நிதி தராவிட்டால் வாக்கு சீட்டுகளை அச்சிடமாட்டோம் என அச்சக திணைக்களம் அதிகாரபூர்வமாக தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தலைவர் கூறியுள்ளார். இப்படி அதில்லை, இதில்லை என கூற முடிகிறதே தவிர, என்ன செய்யப்போகிறோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூறமுடியவில்லை.

அனைத்து கட்சிகளது கருத்துகளையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்து கொண்டார். இதன் போது “பல கட்சிகளுக்கு மத்தியிலே ஆளும் பொதுஜன பெரமுன, ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர்கள் உள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளுங்கள் என கூறினேன். அனைவரும் கரகோஷம் எழுப்பினர். ஆனால் அவர்கள் பதில் எதனையும் வழங்கவில்லை எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஆகவே திரைக்கு பின்னால் சதி திட்டங்கள் தீட்டப்படுவதும், நடைமுறையாவதும் புரிகிறது. ஆகவே தேர்தல் வேண்டுமென்றால் தெரிவில் இறங்க வேண்டுமென்பதுதான் ஒரே கூற்றாக இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்; திரைக்கு பின்னால் சதி - மனோ
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version