எதிர்வரும் 22,23,24 ஆம் திககிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் 2023 தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி, தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் நாளை(15.02) முதல் ஆரம்பிக்கவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சக திணைக்களம், வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான 469 மில்லியன் ரூபா பணத்தினை வழங்கினால் மட்டுமே அச்சிடப்படுமென தேர்தல் திணைக்களத்துக்கு அறிவித்திருந்த நிலையில், பணம் வழங்கப்படாமையினால் அச்சிடும் பணிகள் நடைபெறவில்லை.
மார்ச் 09 ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தேர்தல் நடைபெறுவது சந்தேகமாக மாறியுள்ளது.