முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது மனைவியுடன் சீனா சென்றுள்ளார். இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றும் பகுதியினூடாக விமானத்துக்கு சென்றதாக விமான நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மனைவி அனோமா ராஜபக்ஷவுடன் நள்ளிரவு 12.25 இற்கு மலேசியா விமான சேவையின் MH 178 விமானத்தின் மூலம் மலேசியா, கோலாலம்பூர் சென்று அங்கிருந்து சீனா செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.