இலவசமாக ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க திட்டம்!

ஜப்பானில் உள்ள வேலைகளுக்கு இயன்றவரை இலங்கையர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (17.02) கைச்சாத்திடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் ஊடாக அதிக திறன் வாய்ந்த பணியாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜப்பானிய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை மட்டுமே வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவசமாக ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க திட்டம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version