டினேஷ் சாப்டர் பிரேத பரிசோதனை சர்ச்சை – நீதிமன்ற உத்தரவு

மர்மான முறையில் இறந்த டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனைகளில் காணப்படும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐந்து பேரடங்கிய வைத்தியர் குழுவின் பெயர்ப்பட்டியலை வழங்குமாறு கொழுப்பு நீதவான் நீதிமன்று பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் டினேஷ் சாப்டர் மர்மான முறையில் இறந்திருந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விசாரணையின் போது, இரண்டுவித பிரேத பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளார் எனவும், பின்னர் சயனைட் நஞ்சு உடலினுள் சென்றதனால் இறந்ததாகவும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்யவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் தொடர்கின்றன.

டினேஷ் சாப்டர் பிரேத பரிசோதனை சர்ச்சை - நீதிமன்ற உத்தரவு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version