இந்தியா, அவுஸ்திரேலியா இரண்டாம் டெஸ்டின் முதல் நாள் நிறைவு

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலலான போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் இன்று டெல்லியில் (17.02) ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 78.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இதில் உஸ்மன் காவாஜா 81 ஓட்டங்களையும், பீட்டர் ஹாண்ட்ஸ்கொம்ப் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும், பட் கம்மின்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஷமியின் வேகப்பந்து வீச்சு, அஷ்வின் – ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சு கலவை அவுஸ்திரேலியா அணியினை கட்டுப்படுத்தியது. ஷமி ஆரம்பத்தியிலேயே விக்கெட்டினை தகர்த்துக் கொடுக்க அஷ்வின் – ஜடேஜா மத்திய வரிசையினை பதம் பார்த்தது. ஷமி 4 விக்கெட்களையும், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி முதல் நாள் நிறைவில் 21 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுள்ளது. இந்தியா அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் மத்தியூ குன்மான் இன்று அறிமுகத்தை மேற்கொண்டார்.

இந்தியா, அவுஸ்திரேலியா இரண்டாம் டெஸ்டின் முதல் நாள் நிறைவு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version