கொழும்பு – 15 முகத்துவாரம் பகுதியில் இன்று (07.03) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிதாரி பயன்படுத்திய போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனம் ஹிங்குருகொட சந்தியின் புதிய பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கிராண்பாஸ் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வாகனத்திலிருந்து டி56 ரக துப்பாக்கி ஒன்றும், துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
