ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு திருமாவளவன் கண்டனம்

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டமை குறித்து பாரளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையையினை வழங்கியுள்ளதாக தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்

“ ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளோம் எனவும் மேலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் ஒத்திவைப்பு பிரேரணையையில் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு திருமாவளவன் கண்டனம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version