ஜனாதிபதி மாளிகையை இடம்மாற்ற ஆய்வு

கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையினை இடம் மாற்றுவது தொடர்பிலான ஆய்வு ஒன்றினை நகர அபிவிருத்தி ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக அதன் பணிப்பளார் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையினை பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பகுதிக்கு மாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடவடிக்கைகளை 1999 ஆம் ஆண்டு ஆரம்பித்து, 2000 ஆம் ஆண்டு வேலைகளையும் ஆரம்பித்தன. அந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்க்கான நடவடிக்கைகளே எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டையினை நிர்வாக தலைநகரமாக மாற்றும் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி J.R ஜெயவர்த்தன ஆரம்பித்து வைத்திருந்தார். கோட்டை பகுதியினை வர்த்தக தலைநகரமாக மாற்றும் திட்டமே அதுவாகும். அதனை தொடர்வதற்கான நடவடிக்கைகளே மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மாளிகையை இடம்மாற்ற ஆய்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version