வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை(30.03) காலை 9.30 இற்கு வவுனியா நகர கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பிக்கும் பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்லவுள்ளதகா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வெடுக்குநாரிமலையில் இயற்கைக்கும், மரபு சார்ந்த இடங்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தாம் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள ஆலய நிர்வாகத்தினர், இனம் தெரியாத விஷமிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அழிப்பு நடவடிக்கையானது தமிழர் மீதான அடக்கு முறையாகவே தாம் பார்ப்பதாகவும், இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு வழிபாட்டுக்கான சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் குற்றம் சுமத்தியுயுள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பபாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகனத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
