சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் காரணமாக இழந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
மேலும், யுத்தம் காரணமாக கடந்த ஆண்டில் உக்ரைனில் பொருளாதார செயற்பாடுகள் சுமார் 30% குறைவடைந்துள்ளதுடன், உக்ரைன் வறுமையை நோக்கி நகர்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட தொகையிலிருந்து 2.7 பில்லியன் டொலர்கள் உடனடியாக வழங்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள தொகை 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு போர் தொடர்ந்தால், தற்போதுள்ள சுமார் 115 பில்லியன் நிதித் தேவைகள் சுமார் 140 பில்லியன்களாக அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.