சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அசத்தலான வெற்றி

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (03.04) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் IPL இன் ஆறாவது போட்டியாக நடைபெற்றது. சென்னை அணியின் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது. 2023 IPL இன் அதிக ஓட்டமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 57(31) ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 47(29) ஓட்டங்களையும், அம்பாதி ராயுடு ஆட்டமிழக்காமல் 27(14) ஓட்டங்களையும், ஷிவம் தூபே 27(16) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க் வூட், ரவி பிஷ்ணோய் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது. இதில் கையில் மேயெர்ஸ் 53(22) ஓட்டங்களையும், நிக்கலஸ் பூரான் 32(18) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மோயின் அலி 4 விக்கெட்களையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக மோயின் அலி தெரிவு செய்யப்பட்டார்.

இன்று (04.04) பி.ப 7.30 இற்கு டெல்லி கப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் டெல்லியில் நடைபெறவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அசத்தலான வெற்றி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version