கொல்கொத்தா எதிர்பாராத வெற்றி.

குஜராத் டைட்டன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய(09.04) ஐ.பி.எல் போட்டியில் கொல்கொத்தா அணியின் துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங் இறுதி ஓவரில் வெற்றி பெற 29 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் இறுதி ஐந்து பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்களை அடித்து வெற்றியினை பெற்றுக் கொடுத்துள்ளார். முன்னதாக வெங்கடேஷ் ஐயர் 83(40) ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கிய போதும் அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அடுத்து ஓவரில் ரஷீட் கான் ஹட்ரிக் விக்கெட்களை கைப்பற்றி குஜராத் அணிக்கான வாய்ப்பை உருவாக்கினார். கொல்கொத்தா அணி வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ஓட்டங்களை அதிரடியாக அடித்தாடி வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹார்டிக் பாண்ட்யா விளையாடாத நிலையில் ரஷீட் கான் தலைமை தாங்கினார். ஷாய் சுதர்சன் 53(38) ஓட்டங்களையும் விஜய் சங்கர் 63(24) ஓட்டங்களையும் பெற்றனர். சுப்மன் கில் 39(31) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சுனில் நரைன் 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் தலைவர் நித்திஷ் ரானா 45 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரஷீட் கான் 3 விக்கெட்களையும், அல்ஷாரி ஜோசெப் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி முதல் தோல்வியினை சந்தித்துள்ளது. இதன் காரணமாக நான்காமிடத்துக்கு பின்னோக்கி சென்றுள்ளது.

கொல்கொத்தா எதிர்பாராத வெற்றி.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version