கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி நகர் ஏறத்தாள நான்கு மாதங்களுக்குப் பிறகு கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது.

அந் நகர மக்கள் பொது முடக்கம் நீக்கப்பட்ட நாளை சுதந்திர நாளாக கொண்டாடியுள்ளனர்.

107 நாட்களுக்கு பின்னரான விடுதலையாக இதனைக் கருதுதியே அவர்கள் தமது விடுதலை நாளாக கொண்டாடியுள்ளனர்.

இதன்காரணமாக திங்கள்கிழமையன்று நள்ளிரவில் திறக்கப்பட்ட மதுக்கடைகள் மற்றும் கடைகளுக்கு மக்கள் வரிசையில் நின்றனர்.

நான்கு மாதங்களின் பின்னர் சிகை அலங்கார கடைகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர்.

அத்துடன் நீண்ட இடைவெளியின் பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஆவலுடன் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவுஸ்ரேலியாவில் இரண்டு தடுப்பூசிகளையும் போடப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி
கொவிட் முடக்கத்தில் இருந்து விடுபட்டதை சுதந்திர நாளாக கொண்டாடும் சிட்னி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version