அட்டைப்படத்தில் மொடன் உடையில் அசத்தும் நயன்

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகையான நயன்தாரா கதாநாயகிக்கு முக்கித்துவம் கொடுக்கும் கதைகளைத் தெரிவுசெய்து நடித்து வருவதுடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மாறுபட்ட திரைக்கதைகளில் நடித்துவருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவர் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துக்கொண்டு மலையாளத்தில் கோல்ட் எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அண்மையில் இந்தியாவின் பிரபல பத்திரிகையொன்றின் அட்டைப்படத்திற்கு இவர் மிகவும் வசீகரமான தோற்றத்தில் புகைப்படமெடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் இவ்வாறு வெளியிடப்பட்ட நயனின் புகைப்படத்தினைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் அதனை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

அட்டைப்படத்தில் மொடன் உடையில் அசத்தும் நயன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version