பெங்களூரை பந்தாடிய சுனில் நரையன்.

சுனில் நரையனின் அபார பந்துவீச்சாலும், துடுப்பாட்டத்தாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இலகுவான வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியுடனான இரண்டாவது தெரிவுகான் போட்டிக்கு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
.
ஐ பி எல் கிரிக்கெட் போட்டி தொடரின் வெளியேற்றும் போட்டி ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி 39(33) ஓட்டங்களை பெற்றார். தேவ்தட் படிக்கல் 21(19) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சுனில் நரையன் 4 விக்கெட்களையும் லுக்கி பெர்குசன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.
கொல்கத்தா நைட் அணியின் , சுப்மன் கில் 29(18), சுனில் நரையன்26(15), நிதிஷ் ராணா 23(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 2 விக்கெட்களையும், யுஸ்வேந்திரா ஷெஹால் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக சுனில் நரையன் தெரிவு செய்யப்பட்டார்.

நாளை மறுதினம் (13/10/2021) இரண்டாவது தெரிவுகான் போட்டி டெல்லி கப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

பெங்களூரை பந்தாடிய சுனில் நரையன்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version