கொரோனா இரண்டாம் கட்ட தளர்வு சந்தேகம்.

கொரோனா பரவல் காரணமாக அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டிருந்தது. அதன் போது இரண்டு கட்டமாக சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய இலகு படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

15 ஆம் திகதி வரை முதற் கட்டமான செயற்பாடுகள் எவை என அரசாங்கம் சுற்று நிரூபம் .மூலமாக அறிவித்திருந்தது. 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட இலகுபடுத்தல் எவை எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை ஏற்ப நடந்து கொள்ளவில்லையெனவும், மக்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லையெனவும் சுகாதா தரப்பு மக்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் வருகிறது. இதன் காரணமாக 16 ஆம் திகதி அமுலுக்கு வர இருந்த தளர்வுகள் நடைமுறைக்கு வருவதில் சந்தேகம் ஏற்பட்டுளளதாக சுகாதார தரப்புகள் தெரிவித்துள்ளன.

16 ஆம் திகதி முதல் திருமணங்களுக்கு 50 பேர் வரை ஒன்று கூடலாம், பொது இடங்களில் ஒன்று கூடல்களை நடாத்தலாம், உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் போன்ற பல் இலகுபடுத்தல்கள் வழங்க திட்டமிருந்தது.

எப்படியிருப்பினும் மாகாண போக்குவரத்து தடை 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 31 ஆம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட தளர்வு சந்தேகம்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version