கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓட்ஸிசன் இன்றி எந்த ஒரு நபரும் இறப்பதற்கு இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா நெருக்கடியான நிலையில் ஓட்ஸிசன் தேவை மிக அதிகமாக காணபப்டுகிறது. இருப்பினும் சிகிச்சைக்கு தேவையான ஓட்ஸிசனை அரசாங்கம் கொள்வனவு செய்து வருகிறதென சுகாதாரதுறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஓட்ஸிசன் கொள்வனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தேவையான அளவு ஓட்ஸிசன் கொள்வனவு செய்யபப்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.