LPL இல் ரோஹித்த ராஜபக்ச – என்ன சொல்கிறார் ரோஹித்த

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச விளையாடுகிறார் என சில ஊடங்களில் வெளியான செய்தி பிழையானது என ரோஹித்த தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்துக்குள் ஈடுபாடுள்ளது அல்லது LPL இல் விளையாடும் எண்ணம் உள்ளது என்ற செய்தி முற்றிலும் பிழையானது. தனிப்பட்ட நபர் ஒருவரின் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேட்காமல் இவ்வாறு செய்தி வெளியிடுவது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதிகளில் ரோஹித அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுவதனால் மாகாணசபை தேர்தலில் போட்டியிட போகிறார் என வெளியான செய்திகளையும் ஏற்கனவே மறுத்த அவர், தனது தகப்பனின் தொகுதியில், அவரால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை செயற்ப்படுத்த தான் அங்கே ஒரு அரசியல்வாதியின் மகனாக செயற்படுவதாகவும், அரசியலில் ஈடுபாடும் எண்ணம் தனக்கில்லை என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LPL இல் ரோஹித்த ராஜபக்ச - என்ன சொல்கிறார் ரோஹித்த
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version