WTC இறுதிப்போட்டி – அவுஸ்திரேலியா முன்னிலையில்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் தி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணியின் துடுப்பாட்டம் மூன்றாம் நாளான இன்று(09.06) நிறைவுக்கு வந்தது. மோசமான ஆரம்பத்தை கொண்டிருந்த இந்தியா அணி அஜிங்கையா ரெஹானே, ஷர்ட்தூள் தாகூர் ஆகியோரின் சத இணைப்பாட்டம் மூலமாக பால முன் முறையில் துடுப்பாடும் நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டது.

அஜிங்கையா ரெஹானே 89 ஓட்டங்களையும், ஷர்ட்தூள் தாகூர் 51 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 109 ஓட்டங்களை 07 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். ரவீந்தர் ஜடேஜா 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அண்மைக்காலமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரெஹானே மீண்டும் அணிக்குள் வந்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். 5000 ஓட்டங்களையும் அவர் பூர்த்தி செய்துகொண்டார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பட் கம்மின்ஸ் 03 விக்கெட்களையும், மிர்ச்செல் ஸ்டார்க், கமரூன் க்ரீன், ஸ்கொட் போலன்ட் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்பத்தில் தடுமாறிய அவுஸ்திரேலியா அணி ரவிஸ் ஹெட், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரது அபாரமான இணைப்பாட்டம் மூலம் மீள்ச்சி பெற்றது. இருப்பினும் இன்று காலை இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியா அணியின் இணைப்பாட்டங்களை முறியடித்து விக்கெட்களை கைப்பற்றி ஆஷி அணியை கட்டுப்படுத்தினர்.

இணைப்பாட்டமாக 285 ஓட்டங்களை ரவிஸ் ஹெட், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். முதல் 3 விக்கெட்கள் 76 ஓட்டங்களை பெற்ற வேளையில் வீழ்த்தப்பட்டன. இறுதி 07 விக்கெட்கள் 108 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

ரவிஸ் ஹெட் 163(174) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஸ்டீபன் ஸ்மித் 121(268) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அலெக்ஸ் கேரி 48 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 04 விக்கெட்களையும், மொஹமட் ஷமி, ஷர்தூள் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version