IPL இறுதிப் போட்டி

IPL கிரிக்கட் தொடரின் இந்த வருடத்துக்கான இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

2019 ஆண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இரண்டாமிடத்தை பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ், கடந்த வருடம் முதல் சுற்றோடு வெளியேறிய நிலையில் இந்த வருடம் ஒன்பதாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதியாக சம்பியனானது. இதுவரை மூன்று தடவை சம்பியன் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. கொலக்கொத்த நைட் ரைடர்ஸ் அணி இரண்டு தடவைகள் தெரிவான இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

2012 ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை வெற்றி பெற்று கொல்கொத்தா அணி முதற் தடவையாக சம்பியானாக மகுடம் சூடியது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் விளையாடும் இறுதி கிரிக்கட் போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

IPL இறுதிப் போட்டி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version