விஜாஸ்காந்த் மீண்டும் யாழ் அணியில்

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் தற்சமயம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. ஜப்னா கிங்ஸ் அணிக்காக கடந்த வருடம் விளையாடிய விஜயகாந்த் விஜாஸ்காந்த் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

10,000 டொலர் அடிப்படை விலையில் ஆரம்பித்த ஏலம் தம்புள்ள ஓரா மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் போட்டியாக நடைபெற்றது. இவ்வாறான நிலையில் 18,000 டொலர் பெறுமதிக்கு ஜப்னா கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஜப்னா கிங்ஸ் அணி ஏற்கனவே மஹீஸ் தீக்ஷனவை வைத்துள்ள நிலையில், டுனித் வெல்லலாகவை வங்கியிருந்தனர். அவர்களது கடந்த வருட முக்கிய சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் விஜாஸ்காந்த்தை தமது அணிக்காக வாங்கியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version