வவுனியா கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் பால்கலன்கள் வழங்கிவைப்பு!

வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையினால் பால்கலன்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15.06) இடம்பெற்றுள்ளது.

வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் திரிசக்தி மதிப்பு சேர்ப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 40 கொள்கலன்கள், முருகனூர் அமுதசுரபி கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி செ. பிரபாகர், வங்கியின் கூட்டாண்மை முகாமைத்துவ அதிகாரிகள், கொமர்ஷல் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் த. யோகச்சந்திரா, மற்றும் கொமர்ஷல் வங்கி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version