நடிகர் விவேக்கிற்கு செய்த சத்தியத்தைக் காப்பாற்றவுள்ள ஆர்யா

தற்போது வெளியாகியுள்ள அரண்மனை-3 திரைப்படத்தின் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பேசிய நடிகர் ஆர்யா, மறைந்த நடிகர் விவேக்கிற்கு வழங்கிய சத்தியத்தை காப்பாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அரண்மனை-3 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக்குடன் நடிக்கும் போது அவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்திற்கு மரங்கள் நடவுள்ளதாகவும் அதற்கு தன்னையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு ஆர்யா அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது மறைந்த நடிகர் விவேக்கிற்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு அவருக்காக தான் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்திற்கு மரங்கள் நடவுள்ளதாக கூறியுள்ளதுடன் தன்சார் நண்பர் வட்டாரம் மற்றும் ஏனையோரையும் மரங்களை நடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் நடிகர் ஆர்யா.

இவரது கருத்திற்கு பலரும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விவேக்கிற்கு செய்த சத்தியத்தைக் காப்பாற்றவுள்ள ஆர்யா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version