ஆப்கானிஸ்தானில் கந்தஹாரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொழுகை முடிவடையும் தறுவாயில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 30 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தலிபான் சிறப்புப் படைகளால் குறித்த பகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தலிபான்களால் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்ய உதவ முன்வருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை யாரும் பொறுப்புக் கூறவில்லை.

