வவுனியா, செயர்மன் கிண்ணம் கிரிக்கெட் நேர அட்டவணை

வி மீடியா ஊடக அனுசரணையோடு வவுனியவில் நடைபெறவுள்ள செயர்மன் கிண்ண கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 4.30 இற்கு வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.


இந்த தொடருக்கான அணிகள் யார் யாரோடு விளையாடுவது என்ற போட்டி ஒழுங்குபடுத்தல் நேற்று(15/10) நடைபெற்றது. போட்டி தொடர் ஏற்பாட்டு குழுவோடு விளையாட்டு உத்தியோகத்தர்கள், வவுனியா மற்றும் வட மாகாண கிரிக்கெட் சங்கங்களின் தலைவர் ரதீபன், அணிகளது தலைவர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்களது பங்குபற்றதலோடு ஒழுங்குபடுத்தல் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் 5 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிக்கு 28 அணிகளும், கால்பந்தாட்ட போட்டிகளுக்கு 10 அணிகளும் விண்ணப்பித்துள்ளன. கிரிக்கெட் போட்டிகளில் நொக் அவுட் முறையில் நடைபெறவுள்ளன.

கால்பந்தாட்ட போட்டிகள் லீக் அடிப்படையில் நடைபெறவுள்ளன.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் விபரம் கீழுள்ளது.

முதல் 8 போட்டிகள் 19 ஆம் திகதியும், ஒன்பதாவது போட்டி தொடாக்கம் 16 ஆம் திகதி வரையிலான போட்டிகள் 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.


16 ஆவது போட்டி தொடக்கம் 24 ஆவது வரையான போட்டிகள் 23 ஆம் திகதியும், அரை இறுதி போட்டிகள் 24 ஆம் திகதி காலையிலும், இறுதிப் போட்டி 24 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.


போட்டிகள் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளேன். விளையாடும் அணிகள் அந்த தினங்களில் காலையில் வருகை தந்து பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலபந்தாட்ட போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version