கொரோனா புதிய வடிவம் எந்த நேரமும் வரலாம்

திரிபடைந்த கொரோனா வைரஸ் எந்த நேரமும் நாட்டுக்குள் வரலாம். ஆகவே மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. அத்தோடு துறைமுகம் முழுமையாக தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. ஆகவே வெளிநாட்டுகளிலுள்ள திரிபடைந்த வைரஸ் நாட்டுக்குள் வரும் வாய்ப்புகளும், பரவும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன.

மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் போதிய இடைவெளிகளை பேணவேண்டும். சுகாதர வழிகாட்டுதல்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். அத்தோடு முக்கியமாக தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

67 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். 58 சதவீதமானவர்கள் ஒரு ஊசியினை , மாத்திரமே பெற்றுள்ளனர். தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதனால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா புதிய வடிவம் எந்த நேரமும் வரலாம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version