பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு நேற்று (18.06) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

வர்த்தமானியின்படி, மின்சார விநியோகம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளை பாராமரித்தல், வவேற்பு, உணவு, சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version